நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி, அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி வருகின்றனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார் மருத்துவர் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் நேற்று முன்தினம் காலமானார்.
அன்னாரின் பூதவுடல் நேற்று(08.11.2025) பிற்பகல் 2 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பூதவுடலுக்கு தமிழரசுக்கட்சியின் பிரதேசசபையின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள்,உறுப்பினர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.