ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற தேசிய தொழுநோய் மாநாடு.!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான  வரைபடமும் வெளியிடப்பட்டது

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06.11.2025)  கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமானதோடு அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும்  அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ,பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்  இலங்கை1995 ஆம் ஆண்டில் தொழுநோயை ஒழித்த போதிலும் அந்தப் பயணம் இன்னும்  நிறைவடையவில்லை. தொடர்ந்தும் புதிய நோயாளிகள் அடையாளங் காணப்படுகின்றனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500-2000 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர்களில் சுமார் 10% பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புதியது பழையவை