போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
இதன்படி, நீதியரசர்கள் பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, 2017 மார்ச் 20 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்தது.
பிரதிவாதி தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னைய வழக்கின் போது, மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சாட்சியமளிக்க அனுமதிக்காததால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நியாயமான விசாரணைக்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
இது நியாயமான விசாரணைக்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தை மீறுவதாகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஒஸ்மான் பெரேரா என்பவர், 2002 இல் 4.4 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததற்காகவும் கடத்தியதற்காகவும், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றஞ்சாட்டப்பட்டார்.
விசாரணையைத் தொடர்ந்து, மேல் நீதிமன்றம் அவரை குற்றவாளியாகக் கண்டறிந்தது.