அதிக விலைக்கு அரிசி விற்பனை - ஏறாவூர் வர்த்தகர்களுக்கு ரூ. 3 இலட்சம் அபராதம்.!

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர்ப்பகுதியில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கினர்.

நேற்று (2025.12.19) கீரி பொன்னி (Kiri Ponni) அரிசியை அதிக விலைக்கு விற்ற இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு ஏறாவூர் நீதவான் நீதிமன்றினால் ரூ. 200,000/- (இரண்டு இலட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கடந்த 2025.12.15ம் திகதியன்று சம்பா (Samba) அரிசியை அதிக விலைக்கு விற்ற மற்றுமொரு வர்த்தகருக்கு ரூ. 100,000/- (ஒரு இலட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களைக்கொள்வனவு செய்வதைத்தவிர்க்குமாறும் நுகர்வோர் அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதியது பழையவை