மட்டக்களப்பு பெரியபோரதீவு பகுதியில் மனித பாவனைக்கு உதவாத மீன்கள் அழிப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியில் மனித பாவனைக்கு உதவாத வகையில் விற்பனை செய்யப்பட்ட மீன்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பெரியபோரதீவு கட்டறும்பு சந்தியில் பாவனைக்குதவாத மீன்கள் விற்கப்படுவதாக நேற்று(09.12.2025)ஆம் திகதி  பொதுமக்களினால் பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இம் மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக சுகாதார பரிசோதகர் கு.குபேரன் தெரிவித்தார்.

இதன்போது பாவனைக்குதவாத வகையிலிருந்த சுமார் 58 கிலோ நிறையுடைய மீன் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

பிரதேச சபையின் அனுமதி இன்றி வீதி ஓரங்களில் பொருத்தமற்ற இடங்களில் மீன்களை விற்பனை செய்கின்றார்கள். விற்பனை செய்யும் மீன் வியாபாரிகள் பிரதேச சபையின் அனுமதியோடு பொருத்தமான இடத்தில் விற்பனை செய்ய வேண்டும் என மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டன.

பழுதடைந்த நிலையில் உள்ள மீன்களை விற்பனை செய்ய வந்த வியாபாரிகளுக்கு சுகாதார பரிசோதகர்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பழுதடைந்த மீன்கள் புதைக்கப்பட்டுள்ளன.
புதியது பழையவை