மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று(22-12-2025)ஆம் திகதி விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் கிரான்குளம் தர்மபுரம் சந்தியில் வைத்து வீதியை கடக்க முற்பட்ட காலை உணவு விற்பனை செய்பவரின் மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுவதுடன் விற்பனைக்காக மோட்டார்சைக்கிளில் எடுத்துவரப்பட்ட காலை உணவுகள் அனைத்தும் வீதியில் சிதறிக் காணப்படுகிறது.
மட்டக்களப்பு - கல்முனை வீதியானது அதிக வாகன நெரிசல் மற்றும் வேகம் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நிகழும் பகுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக கிரான்குளம், தாளங்குடா போன்ற பகுதிகளில் பாதசாரிகளும் சிறு வியாபாரிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காரின் ஓட்டுநர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.