கணவனை கத்தியால் வெட்டிக் கொலை செய்த மனைவி - மட்டக்களப்பில் சம்பவம்.!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரியில்  குடும்பத்தகராறு காரணமாக மனைவி கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (15.12.2025) வாகனேரி, குடாமுனைகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 46 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவராகும்.

மனைவி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் வயல் காவல் கடமையில் ஈடுபடுபவர் என்றும் அன்றைய தினம் வயலுக்குச்சென்று வீடு திரும்பியதும் மனைவியிடம்  புட்டு அவித்துத் தருமாறு கூறிய நிலையில் மனைவி முடியாது எனக் கூற இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்ட நிலையில் பின் கைகலப்பாக மாற கணவனை மனைவி கத்தியால் தாக்கிய நிலையில் கணவன் உயிரிழந்துள்ளார்.  

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த வாகனேரி பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவது வழமையாகவுள்ளது.

கடந்த வருடமும் மனைவியை கொலை செய்து விட்டு சிறைக்குச்சென்றவர் சிறையிலிலிருந்து வந்து மாமியாரைக்கொலை செய்து விட்டு மீண்டும் சிறைக்கு சென்ற சம்பவம் இப்பிரதேசத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை