மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காத்திருப்பு பட்டியலிலுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அக்குடும்பத்திலுள்ள கல்வி கற்கும் சிறார்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வானது சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் நேற்று(29.12.2025)ஆம் திகதி வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இதன்போது 85 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,000 வீதமும் கல்வி கற்கும் 16 சிறார்களுக்கான கொடுப்பனவாக தலா ரூ.30,000 உம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.