இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டில் உணவுப் பற்றாக்குறை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் வறுமை காரணமாக பல குடும்பங்கள் உணவைக் குறைப்பது போன்ற சூழ்நிலையை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிகாட்டியுள்ளது.