மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை தெற்கு களம் பாலர் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு, பரிசளிப்பு விழா நிகழ்வானது (27.12.2025)ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் முன்பள்ளி ஆசிரியை திருமதி.பி.பிரியதர்சினி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ் பிரதம அதிதியாகவும் துறைநீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் குரு. எஸ்.இளங்கோபன் ஆன்மீக அதிதியாகவும், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மாணவர்கள்,பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களின் பல்வேறுபட்ட விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அதிதிகளினால் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதி முன்பள்ளி பாடசலைச் சமுகத்தினால் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.