திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சேருநுவர பகுதியில் வைத்து , காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் காரில் பயணித்தோர் காயங்களின்றி தெய்வாதீனமான முறையில் உயிர்தப்பியுள்ளனர்.
மட்டக்களப்புக்கு திருமண வீட்டுக்குச் சென்று திருகோணமலை நோக்கிவரும்போது தூக்க களக்கத்தினால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.