மண் சரிவு எச்சரிக்கை..!வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக பூட்டு.!

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள புஸ்ஸெல்லாவ நகரில், மண் சரிவு அபாயம் காரணமாக 07 கடைகள் நேற்று (19.12.2025)  தற்காலிகமாக மூடப்பட்டு,அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட கடைகளில் திடீரென சுவர்களில் பிளவுகள் தோன்றியதை தொடர்ந்து அதிகாரிகள் கடைகளை மூடுவிக்கின்ற முடிவை எடுத்தனர்.

இந்த அபாய நிலை குறித்து புஸ்ஸெல்லாவ பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மோசமான வானிலை காரணமாக புஸ்ஸெல்லாவ நகரத்துக்கு அருகிலுள்ள சென்குவாரி தோட்டத்தின் மேற்பகுதியில் நிலம் பிளந்து  மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் புஸ்ஸெல்லாவ நகரத்துக்கு கீழ் புறமாக உள்ள புஸ்ஸெல்லாவ பள்ளேகம கிராம சேவகர் பிரிவிலும் இதே போன்ற நில பிளவுகள் காணப்பட்டுள்ளன. 

அவற்றை சரி செய்ய பிரதேச மக்கள், கிராம சேவையாளர்கள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதியது பழையவை