சமுக நலன் புரி அமைப்பு(SWO) நிறுவனத்தினால், அவுஸ்திரேலியா மகளிர் இல்லத்தின் நிதி உதவியுடன், அண்மையில் ஏற்பட்ட கடும் மழையினால் வெள்ளம், பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 215 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிவாரணப் பணி கடந்த (06.12.2025)ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தின் வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிவாரண பணியில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் துலாஞ்சனன் அவர்களும், அரச உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.