மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 புத்தாண்டு கடமை ஆரம்பம்.!

2025 இறுதிப் பகுதியில் எமது நாடு முகம் கொடுத்த திட்வா சூறாவளி அனர்த்தத்திற்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்பும் நோக்குடன் இம்முறை நாடு முழுவதிலும் உள்ள அரச நிறுவனங்களில் கடமை ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் தலைமையில் தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் முப்படைகள் உட்பட நாட்டிற்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அரச சேவை உறுதியுரையும் இடம் பெற்றது.

தற்போதைய சவால்கள், அரச கொள்கைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பாக பிரதேச செயலாளரின் புத்தாண்டு உரை இடம் பெற்றது.

"வளமான நாடு அழகான வாழ்க்கை" என்பதனூடாக சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் இம்முறை உறுதி மொழி அமையப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை