கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 50 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் .!

கட்டுநாயக்க  விமான நிலையத்தில் சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருள் தொகை ஒன்று இன்று (06.01.2026) கைப்பற்றப்பட்டுள்ளது.  

3  வெளிநாட்டு பயணிகளுடன் இந்த போதைப்பொருள் தொகையை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்களும் ஒரு ஆணுமாவர். 27 வயதான ஆண் மும்பையில் உள்ள தொலைபேசி பரிமாற்ற நிலையமொன்றில் பணிபுரிபவர் என்றும், 25 மற்றும் 31 வயதுடைய மற்றைய இரு பெண்களும் மும்பையில் பணிபுரியும் பாடசாலை ஆசிரியைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் இன்று காலை 11.07 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்கள் கொண்டு வந்த 3 பயணப் பொதிகளில் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட 48 பொதிகளில், மொத்தம் 50 கிலோகிராம் 'குஷ்' போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
புதியது பழையவை