மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் காயங்ககேனி 43ம் கட்டை பகுதியில் நேற்றிரவு (01.01.2026)விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியூடாக இரு இளைஞர்கள் எவெஞ்சர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில் மோட்டார்சைக்கிள் வீதி ஓரத்தில் நடப்பட்டிருந்த தூரத்தை அடையாளப்படுத்தும் மைல் கல்லில் மோதி வித்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய இருவரில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மற்றையவர் பலத்த காயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் விபத்துக்கான ஏனைய காரணங்களை கண்டறிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.