மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி ஐயன்கேணி பிரதேசத்தில் சாமாதான பேரவை, பல்சமய ஒன்றியங்கள் இணைந்து சமாதான பொங்கல் விழா நிகழ்வினை நடாத்தி இருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட எஹெட் கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பல்சமய ஒன்றியங்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் ஆகியோர் இணைந்து சமாதானப் பொங்கலை பொங்கி வைத்ததோடு இன, மத நல்லிணக்கத்தை வலியுறும் வகையில் சொற்பொழிவுகள் மற்றும் சிறுவர் நிகழ்வுக என்பன நடைபெற்றது.
தமிழ், முஸ்லிம் மக்களுடன் இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய மத தலைவர்களும் இணைந்து நடாத்திய மேற்படி சமாதான பொங்கல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தில் இன மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருந்த தோடு, சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும் வகையில் சமாதான பொங்கலாக அமைந்திருந்தது.
ஜயங்கேணி சமாதான குழு தலைவர் திரு கமல் அவர்களின் ஒழுங்கமைப்பில்,
கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை அன்ரனி ஜெயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்,
மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியங்களின் தலைவர்
அருட்தந்தை லூக்,ஜெகதீஸ்வரன் குருக்கள்,
ஜனாப் இக்பால்
மட்டக்களப்பு பெரிய பள்ளிவாசல் மௌலவி, ஆகியோருடன் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன், செங்கலடி ஐயன்கேணி குடும்ப நல உத்தியோகத்தர், ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், ஐயன்கேணி சமூக சேவகர் உமாசேகரன்
மற்றும் பல்சமய ஒன்றிய உறுப்பினர்கள்,
திட்ட இணைப்பாளர் ச.மைக்கல், சமாதான குழு உறுப்பினர் ஆகியோர் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.