மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள துறையடி வீதி, அல் மதீனா மீனவர் சங்கப்பகுதியில் நேற்றிரவு (05.01.2026) காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் அப்பகுதி மக்களது பயிர்கள், வீட்டுத்தோட்டப்பயிர்கள், மதில்கள், குடிசைகள் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக இப்பகுதி மக்கள் உயிர்களுக்கும் உத்தரவாதமில்லாமல் அச்சத்திலயே ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.