காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை!

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று(26.01.2026) வெற்றிகரமாக நடைபெற்ற லேப்ராஸ்கோபிக் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை இடம் பெற்றன.

 காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் மகளிர் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக லேப்ராஸ்கோபிக் ஹிஸ்டெரெக்டமி (Laparoscopic Hysterectomy) என்ற நவீன குறைந்த காயம் கொண்ட கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

வைத்திய அத்தியட்சகர் Dr. M.S.M.ஜாபிர் அவர்களுடைய பூரண வழிகாட்டலின் கீழ் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் விசேட வைத்திய நிபுநர்
டாக்டர் M சிவதீபன்ராஜ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது.

லேப்ராஸ்கோபிக் ஹிஸ்டெரெக்டமி என்பது பாரம்பரிய திறந்த அறுவை சிகிச்சை முறைகளுக்கு மாற்றாக, மிகச் சிறிய துளைகளின் மூலம் கேமரா மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும்.
இந்த முறையின் முக்கிய நன்மைகள்:
 * குறைந்த இரத்த இழப்பு
 * வலி மிகக் குறைவு
 * பெரிய அறுவை காயம் இல்லை
 * தொற்று அபாயம் குறைவு
 * விரைவான நடமாட்டம்
 * மருத்துவமனையில் குறைந்த நாட்கள் தங்குதல்
 * இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புதல்
இந்த நவீன முறையினால் நோயாளியின் உடல் மற்றும் மனநலம் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறது. 

இந்த லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின்யின் மகளிர் மருத்துவ சேவைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதனால் நோயாளிகள் தூர நகரங்களுக்குச் செல்லாமல் தங்களது பகுதியிலேயே உயர்தர சிகிச்சையைப் பெற முடிகிறது.
எதிர்காலத்தில் பின்வரும் மகளிர் நோய்களுக்கு லேப்ராஸ்கோபி மூலம் சிகிச்சை வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன:

 * கருப்பை கட்டிகள் (Fibroid)
 * முட்டைச்சினை கட்டிகள் (Ovarian cyst)
 * எண்டோமெட்ரியோசிஸ்
 * வெளிக்கருப்பை கர்ப்பம் (Ectopic pregnancy)
 * குழந்தையின்மை (Subfertility) தொடர்பான பரிசோதனை மற்றும் சிகிச்சைகள்
 * Diagnostic & Operative Laparoscopy
குழந்தையின்மை சிகிச்சைகளில் லேப்ராஸ்கோபி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, அனஸ்தீசியா மருத்துவர்கள், தியேட்டர் நர்சிங் குழு, மற்றும் அனைத்து மருத்துவ பணியாளர்களின் ஒருங்கிணைந்த குழு முயற்சியால் சாத்தியமானது.
புதியது பழையவை