களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தூணில் மோதிய வாகனம்.!

மட்டக்களப்பு  களுவாஞ்சிக்குடி அற்புதப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (04.01.2026)ஆம் திகதி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணில் மோதி மஹிந்ரா நிறுவன தயாரிப்பான பொலிரோ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் பொலிரோ வாகனத்தின் முன் பகுதி பலத்த சேதத்தை எதிர்கொண்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை