கன்னியா பிள்ளையார் ஆலய காணி விவகாரம் - சுமந்திரன் ,குகதாசன் களத்தில்!

​திருகோணமலை கன்னியாவில் நீண்டகாலமாக பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த காணியை, தொல்பொருள் திணைக்களம் அண்மையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இப்பகுதியில் அகழ்வுப் பணிகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு தொடர்பில் ஆராய இன்று (04.01.2026)ஆம் திகதி  நேரடி விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

​திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களின் அழைப்பின் பேரில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார்.

​முக்கிய அம்சங்கள்...

​ஆலய காணி கையகப்படுத்தப்பட்ட விதம் குறித்து கேட்டறியப்பட்டது.
​மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

​இந்த விவகாரத்தை உடனடியாக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை