அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், அனைத்து அரசாங்க வாகனங்களுக்கும் சிறப்பு டிஜிட்டல் எரிபொருள் அட்டை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் ஊழல் மற்றும் முறைகேடு
இதன் மூலம் நாடு முழுவதும் அமைந்துள்ள எந்தவொரு எரிபொருள் நிலையத்திலிருந்தும் எரிபொருளைப் பெற உதவும் எனவும் தெரிவித்துள்ளது.
அரசாங்க வாகனங்களுக்காக எரிபொருள் விநியோகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகளை குறைப்பதே இந்த முறையை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்க நிறுவனத்தில் எரிபொருள் பயன்பாட்டு பதிவுகளை துல்லியமாக கண்காணித்து பராமரிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்குவது என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தின் மூலம் அரசாங்க வளங்களை மிகவும் முறையாக நிர்வகிக்கவும், எரிபொருள் விரயத்தைக் குறைப்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை ஆதரிக்கவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்பார்த்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.