சற்றுமுன் கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து.!

கிளிநொச்சி முரசுமோட்டையில் பேரூந்து கார் என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி – முல்லைத்தீவு A35 பிரதான வீதி, முரசுமோட்டை பகுதியில் இன்று (12.01.2026)இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விசுவமடுவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கார் வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கிச் சென்ற பேருந்து  நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 காரில் பயணித்த 5 பேரில் 2பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
🩺 படுகாயமடைந்த 3 பேர்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை