பேரூந்திலிருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு.!

கண்டி - ஹதரலியத்த பிரசேத்தை சேர்ந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவியே மாணவி, பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலதிக வகுப்புக்கு சென்று மீண்டும் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். இதன் போது, பேருந்திலிருந்து இறங்க முயன்ற வேளையில் அவர் கீழே விழுந்து, படுகாயமடைந்த அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஹதரலியத்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவி அப்சரா தசநாயக்கவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது.
புதியது பழையவை