அம்பாறை மாவட்ட செயலகத்தின் முதல் நாள் சத்திய பிரமாணம்.!

மலர்ந்துள்ள புதுவருடத்தின்(2026)  முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றது.

அம்பாறை மாவட்ட  செயலக   உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2026ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இன்று(01.01.2026)ஆம் திகதி மாவட்ட  செயலகத்தில்   காலை இந்நிகழ்வு அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில்  தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

 த்தியப்பிரமாண நிகழ்வில்    உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான   சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன்  புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி  தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்ரம கேட்போர் கூட்டத்தில் ஏனைய நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை