சக்கர கதிரையில் இலங்கையை சுற்றி பயணத்தை ஆரம்பித்த இளைஞன்.!

மன்னாரில் இருந்து சக்கர கதிரை மூலம் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த  மக்கின் முகமது அலி இன்று (20.01.2026) ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

அவர் நேற்று (19.01.2026) ஆம் திகதி அன்று  தனது பயணம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தெரியப்படுத்தியுள்ளதுடன், இன்று (20) மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் சில கோரிக்கைகளை முன் வைத்தும் குறித்த இளைஞன்    மன்னாரில் இருந்து இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
புதியது பழையவை