கல்முனை மாளிகைக்காடு மையவாடியில் கடலரிப்பு - உடற்பாகங்கள் வெளியாகியதால் பரபரப்பு.!

அம்பாறை மாவட்டம், மாளிகைக்காடு பகுதியில் கடலரிப்பு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள மையவாடி (மயானம்) பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

கடலலைகள் நிலப்பகுதிக்குள் ஊடுருவி மையவாடியை அரித்துச் செல்வதால், அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்த உடற்பாகங்கள் வெளியில் தெரிவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்தத் துரதிர்ஷ்டவசமான நிலையால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

மையவாடியைப் பாதுகாப்பதற்கும், மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரக் கரைப்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை