மட்டக்களப்பு துறைநீலாவணையில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் நேற்றிரவு (14.01.2026) ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துறைநீலாவணை பிரதான வீதியில் நேற்றிரவு 10.35 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் துறைநீலாவணையைச் சேர்ந்த இளைஞனே  இவ்வாறு விபத்தில்  உயிரிழந்துள்ளார்.

 துறைநீலாவணையிலுள்ள தனது தாயாரின் வீட்டிலிருந்து தான் திருமணம் முடித்துள்ள துரைவந்திய மேடு பகுதிக்கு மோட்டார்சைக்கிள் பயணித்த போதே வீதியில் நின்றிருந்த 
கட்டாக்காலி மாட்டுடன்  மோதி விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இப் பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து வருவதால் தொடர்ந்து போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

குறித்த விபத்தில் சிக்கிய மாடும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை