திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட புதுவகையிலான மணற் கொள்ளை கடற்படையால் முறியடிப்பு.!

திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள்  கைப்பற்றப்பட்டன. 
திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே ஐந்து  டிங்கி படகுகளை  கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது படகில் சுமார் 30 லிட்டர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களும்  கைப்பற்றப்பட்டன.

டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்களில் மண் கடத்தும் காலம் போய் இப்போது மீன்பிடிப் படகுகளை பயன்படுத்தி வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை