ஏறாவூரில் கொழும்பு நோக்கிச் சென்ற அம்பியுலன்ஸ் விபத்து.!

எறாவூரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அம்பியுலன்ஸ் தம்புள்ளையில் விபத்து நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.

இன்று (25.01.2026)ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த பலநோக்கு கூட்டுறவு வைத்தியசாலைக்கு சொந்த அம்பியுலன்ஸ் வண்டி தம்புள்ள, ஹபரணையில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அல்ஹாபிழ் உவைஸ், ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சக்கூர், அவரது மனைவி, அம்பியுலன்ஸ் சாரதி அஸீம் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை