ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆணையம் அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து கலந்துரையாட நாளை (05.01.2026) திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தப்போவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
அவசர நடவடிக்கை
குறித்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாதுகாப்பு ஆணையத்தின் நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன் கொலம்பியா கூட்டத்தை முன்னெடுக்குமாறு கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.