கண்டி மாவட்டத்தின் உடதும்பர பகுதியில் உள்ள தேவஹந்தியா கிராமத்தில் இன்று(08.01.2026) மாலை 5.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 2.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவொரு சிறிய நிலநடுக்கம் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.