தமிழீழ மண்ணின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த முத்துக்குமாரின் நினைவேந்தல்.!

தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உகந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு  (29.01.2026)ஆம் திகதி  இடம்பெற்றுள்ளது.

யாழில் உள்ள தமிழீழத் தாயக நினைவேந்தல் பணிமனையில் உணர்வுப்பூர்வமாக இந்த நினைவேந்தல் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழினத்தின் உரிமைக்காகத் தன்னை ஈகம் செய்த வீரனுக்கு, உணர்வாளர்கள் திரளாகக் கூடி வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
புதியது பழையவை