மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட பூஜை.!

2026 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாள் (15.01.2026)ஆம் திகதி  வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் நுழையும் நேரமே (சங்கராந்தி காலம்) தை மாதம் பிறக்கும் நேரமாகக் கருதப்படுகிறது.

இதனை முன்னிட்டு இன்று(15.01.2026))ஆம் திகதி  இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்று வருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தில்  கிழக்கிலங்கையின் சிறப்புமிக்க அம்மன் ஆலயமான  மட்டக்களப்பு பெரியபோரதீவு  ஸ்ரீ பத்திரகாளி அம்மன்  ஆலயத்தில் இன்று  சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இவ் பூஜை வழிபாட்டில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை