கந்தளாயில் மான்களை வேட்டையாடிய இருவர் கைது.!

கந்தளாயில் மான்களை பொறி வைத்து வேட்டையாடிய இருவரை கந்தளாய் - சூரியபுர பொலிஸார் நேற்று முன் (04.01.2026) மாலை கைது செய்துள்ளனர்.

கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பொறிவைத்து மான்களை வேட்டையாடிய கந்தளாய் சூரியபுர பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

சூரியபுர பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு மான்களுடன் சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.

 இதன்போது கொண்டு செல்ல தயாராக வைத்திருந்த இறந்த இரு மான்களும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பொறியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் (05.01.2026) திங்கட்கிழமை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

புதியது பழையவை