500 ரூபாக்கு ஆசைப்பட்டு மானம் இ்ழந்த அம்பாறை ஆலையடிவேம்பு பதிவாளர்.!


அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் ஒருவர், 500 ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை (16.02.2026) கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய அதிகாரி கைதாகியுள்ளார்.


 இல்லத்தில் பராமரித்து வந்த அலுவலகம்
குறித்த வர்த்தகர் தனது மகளின் பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்வதற்காக பிரதேச செயலகத்திற்குச் சென்றிருந்தபோது, சந்தேகநபர் 1,000 ரூபாயை கையூட்டலை கோரியதாகக் கூறப்படுகிறது.


முதற்கட்டமாக 500 ரூபாயைப் பெற்றுக்கொண்ட அதிகாரி, பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக பெப்ரவரி 16ஆம் திகதி வரும்போது எஞ்சிய 500 ரூபாயைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, நேற்று பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோது, எஞ்சிய 500 ரூபாய் கையூட்டல் பணத்தைப் பெற்றுக்கொண்ட வேளையில் அவர் கைது செய்யப்பட்டார்.

தனது இல்லத்தில் பராமரித்து வந்த அலுவலகத்தில் வைத்தே கைது இடம்பெற்றதாக கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைதான சந்தேகநபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
புதியது பழையவை