தமிழ் எம்.பிமார் உட்பட ஓய்வூதியதாரர்களுக்கு ஆப்பு..!

சனீஸ்வரனுக்கு சனி பிடிக்குமா? அந்த விடயம் துல்லியமாக தெரியாமல் விட்டாலும்; திருமலையில் உள்ள சனீஸ்வரன் கோவிலுக்கு இனவாத சனி பிடிக்கும் கதை புதிதாக தெரிகிறது.

இந்த ஆலயத்துக்குள் தனியார்கள் பூசைப்பொருட்களை வியாபாரம் செய்வதற்கு ஆலய நிர்வாகம் தடை விதித்த நிலையில் ஏற்கனவே அங்கு அவ்வாறான வியாபாரத்தை செய்து வந்த ஒரு சிங்களப்பெண் இந்த உத்தரவை ஏற்க மறுத்ததுடன் மாத்தியோசி பாணியில் பௌத்த பிக்குகளை தனக்கு சார்பாக தூண்டி விட்டு அந்த ஆலயத்தில் தமது சிங்களப் பரம்பரைக்கும் உரித்து உண்டு என்ற வகையில் புதிய உசுப்பேற்றலை செய்தார்.

சிறிலங்காவில் ராஜபக்ச அதிகார மையம் உட்பட்ட எதிர்க்கட்சிகள் இப்போது அநுர அரசாங்கம் தமிழர்களிடம் ஏதோ அதிகம் அக்கறை காட்டுவதான போலி விம்பத்தை கட்டவிழ்த்து குய்யோ முறையா போடும் பின்னணியில் திருமலை சனீஸ்வரன் கோவிலுக்கு இனவாத சனி பிடிக்கும் கதை புதிதாக முளைத்தது.

அநுர அரசாங்கம் தமிழர்களில் அதிகமாக கரிசனைப்படுவதாகவும் வடக்கு கிழக்கில் படை முகாம்களை மூடி படை பிரசன்னத்தை அங்கு குறைப்பதாகவும் போரில் தியாகம் செய்த சிறிலங்கா படையினரை அவமதிப்பதாகவும் பௌத்த சாசனத்தை மதிப்பதாகவும் சர் சர் என தமது உசுப்பேற்றல் அஸ்திரங்களை எய்கிறார்கள்.

ஆனால் யதார்த்தத்தில் அநுர அரசாங்த்தின் நடவடிக்கையால் தான் இன்று 3வது நாளாக புத்தரின் அஸ்தியை சிறிலங்கா பௌத்த சிங்களவர்கள் தரிசிக்க முடிகிறது.

வடக்கு கிழக்கில அரசாங்கம் படைபிரசன்னத்தை குறைப்பதாக தற்போது அதிகம் சவுண்டுவிடும் ராஜபக்சகள் இந்த குரலை தமது ஊழல் முறைகேடுகள் தொடர்பாக புதிய விசாரணைகளை மறைக்கும் இருகோடுகள் தத்துவத்துக்காக பயன்படுத்துவது நிதர்சனமாக தெரியும்.

இந்த நிலையில் எதிர்வரும் 17 இல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கும் நிரந்தர ஆப்புவரும் நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது.
புதியது பழையவை