இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

நிலவுகின்ற வறட்சியான வானிலை நாளை முதல் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். இவைதவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். 

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் 


ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 - 40 km  வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

கொழும்பு தொடக்கம்  புத்தளம்  ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை