தொழுநோய் விழிப்புணர்வு நடைபவனி.!

உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் விழிப்புணர்வு நடைபவனிப் பேரணி மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியும் கதிரவெளி கதிரா எகெடமி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

தொழு நோய் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் கதிரவெளி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் கட்டுமுறிவு சந்தி தொடக்கம் திருகோணமலை பிரதான வீதி ஊடாக கதிரா எகெடமியை வந்தடைந்து அது தொடர்பான கண்காட்சி நிகழ்வை ஆரம்பித்தனர்.

தொழு நோயாளர்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சையளிப்பது, நோயாளர்கள் சமூகத்திலிருந்து இணங்காணப்பட்டு ஒதுக்குதல், ஆரம்பத்தில் சிகிச்சை பெறுவதை ஊக்குவிப்பது எனும் தொனிப்பொருளில் இப்பேரணி இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணி வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் த.சசிந்த மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பு.சோதிராஜ் தலைமையில் இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு தொழுநோய் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் லிபோஜிதா மற்றும் தொழுநோய் பொதுச் சுகாதார பரிசோதகர் சோ.தீபகுமரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் வாகரை பிரதேச சபை தவிசாளர், வேர்ல்ட் விஷன் நிறுவன முகாமையாளர், வேர்ல்ட் விஷன் நிறுவன சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் , கதிரவெளி பாடசாலை அதிபர் மற்றும் வாகரை பாடசாலை அதிபர், மட்டக்களப்பு கவேரி கலா மன்றம் ஊடாக வீதியோர விழிப்புணர்வு நாடகம் ஒன்றும் கதிரவெளி பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றது.

இதில் பிரதேச சபை ஊழியர்கள் , பிரதேச செயலக ஊழியர்கள், தாய்மார் கழக உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாடசாலையின் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை