இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கப் பிரதேசம் நாட்டை விட்டு அப்பால் விலகிச் செல்வதனால் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 


வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டல தளம்பல் நிலையானது விருத்தியடைந்து ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக தற்பொழுது இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படுகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக மணித்தியாலத்திற்கு சுமார் 50 - 60 km வேகத்தில் பலத்த காற்றும் இடியுடன் கூடிய பலத்த மழையும் செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். ஆனபடியினால் இக் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 40 km  வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை