திருகோணமலை பஸ் தரிப்பிடத்தில் சந்தேகத்துக்கிடமான இரு சூட்கேஸ் பெட்டிகளை திருகோணமலை பொலிஸாரினால் இன்று (10.02.2026) காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இரு சூட்கேஸ் பெட்டிகளும் மிக நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்தை அவதானித்த பிரயாணிகள், சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், இந்தப் பெட்டிகள் பயணியினால் தவறவிடப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வைக்கப்பட்டதா என்பது குறித்தும், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை பரப்பாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.