2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்று (17.02.2026)ஆம் திகதி ஆரம்பமான நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரீட்சை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோதிலும், மாணவர்கள் காலை வேளையில் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு பின்னர் பரீட்சை மையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்தது.
மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம், பட்டிருப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், கல்குடா கல்வி வலயம் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஆகிய ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் பரீட்சைகள் ஆரம்பமானன.மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஒழுங்குடனும் தமக்கென ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.