இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.