நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து இன்று (23.03.2026)நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் விலை 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 450 கிராம் பாணின் புதிய விலை 130 ரூபாய் ஆகும். அதேவேளை ஏனைய வெதுப்பக பொருட்களின் விலைகளும் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (23) நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வரும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.