மட்டக்களப்பு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கி வைப்பு.!

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் தாய் சேய் பராமரிப்புப் பிரிவின் அத்தியாவசியத் தேவையான 'இன்பன்ட் வார்மர்' (Infant Warmer) இயந்திரம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.


சுமார் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த மருத்துவ உபகரணம், கோவில் போரதீவைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிக்கும் பிரபல வர்த்தகருமான சமூக சேவையாளர் மார்க்கண்டு நேசராசா மற்றும் அவரது குடும்ப உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

பழுகாமம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், 'மட்டக்களப்பு மற்றும் லண்டன் வைத்தியசாலை நண்பர்கள் வட்டம்' அமைப்பிடம் "BUDS" பிருத்தானி கிளையிடம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைவாக, லண்டனில் தொழில்புரியும் வர்த்தகர் மார்க்கண்டு நேசராசா இக்கோரிக்கையினை ஏற்று நிதி உதவியினை வழங்கியதுடன் மட்டக்களப்பு மற்றும் இலண்டன் "BUDS" அமைப்பினர் இணைந்து குறித்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டது


மருத்துவ உபகரணத்தைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில், மார்க்கண்டு நேசராசா அவர்களின் சகோதரரும் சமூக சேவையாளருமான திரு. மார்க்கண்டு பரநிருபசிங்கம் கலந்துகொண்டு இயந்திரத்தை வைத்தியசாலை அதிகாரிகளிடம் இன்று(10.03.2026) ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் திரு.எஸ்.சிறிவித்தியன் ,மட்டக்களப்பு வைத்தியசாலை லண்டன் நண்பர்கள்,மகப்பேற்று விசேடவைத்தியர் நிபுணர் திரு.எஸ்.கருணாகரன் ,உட்பட்ட பல வைத்தியர்கள் மற்றும் நிறுவனத்தின் உறுப்பினர்கள், போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்வரம் கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பழுகாமம் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சிற்றூழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

தாய் - சேய் பராமரிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த இயந்திரம் வழங்கப்பட்டமையானது, பிரதேச மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை