இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று  மதியம் சுமார் 12.12 மணியளவில் நீர்கொழும்பு, வறக்காபொல, அரநாயக்க, ஹம்பளை, விபிளை, இகினியாகல மற்றும் அக்கரைப்பற்று போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மாகாண கரையோரப் பிரதேசங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 


சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40  km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் தென்கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை