இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

நாடு முழுவதிலும் நிலவுகின்ற வறட்சியான வானிலை  மாற்றமடைந்து நாளை முதல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவுகின்ற உஷ்ணமான வானிலை தொடரக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்

களுத்துறை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை