மட்டக்களப்பில் விபத்து -காத்தான்குடி இளைஞர்கள் இருவர் படுகாயம்.!

​மட்டக்களப்பு, நாவற்குடா பகுதியில் இன்று (15.04.2026)ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது

இன்று (15.04.2026) மட்டக்களப்பு நாவற்குடா ஊர்வீதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு அருகாமையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதில் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது.

​இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். 

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்தவர்களால் அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

​விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை