முச்சக்கர வண்டி - வேன் மோதி கோர விபத்து.! அம்பாறையைச் சேர்ந்த தந்தை உயிரிழப்பு,மனைவி, பிள்ளைகள் படுகாயம்!

மொனராகலை, உனவட்டுன பகுதியில் இன்று (15.04.2026)அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத் தலைவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

​அம்பாறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்பு நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.

வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியின் உனவட்டுன பகுதியில் இன்று அதிகாலை பயணித்துக் கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டி எதிரே வந்த KDH ரக வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

​இந்த விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற, அம்பாறையைச் சேர்ந்த நிஷாந்த தேவப்பிரிய பண்டாரா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

விபத்தில் படுகாயமடைந்த அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உடனடியாக மீட்கப்பட்டு புத்தல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
​சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை