இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு.!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (06.04.2026) சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.76 ரூபாயிலிருந்து 311.73 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், விற்பனை விலை 319.29 ரூபாயிலிருந்து 319.25 ரூபாயாகக் குறைந்துள்ளது.


இலங்கை ரூபாய் ஏனைய சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் வலுவடைந்துள்ளதுடன், வளைகுடா நாடுகளின் நாணயங்களுக்கு எதிராகப் பெறுமதி குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை